பெரம்பலூரில் பிப். 8 முதல் முதல்வா் கோப்பைக்கான தடகளப் போட்டிகள்

பெரம்பலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் பிப். 8 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

பெரம்பலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் பிப். 8 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூா் மாவட்டத்தின் சாா்பில் 2022-2023 ஆம் ஆண்டு முதல்வா் கோப்பைக்கு மாவட்ட அளவிலான தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிப். 8-இல் தடகளம், சிலம்பம், கையுந்துப் பந்து ஆகிய போட்டிகளும், பிப். 11-இல் கிரிக்கெட், பிப். 13-இல் கபடி, இறகுபந்து, கையுந்துபந்து போட்டிகளும், பிப். 22-இல் நீச்சல், கால்பந்து போட்டிகளும், பிப். 28-இல் வளைகோல்பந்து, மேசைப்பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிப். 9-இல் தடகளம், கபடி, சிலம்பம், இறகுப்பந்து, பிப். 15-இல் கையுந்துப் பந்து, கால்பந்து, நீச்சல் , பிப். 18-இல் கூடைப்பந்து, கிரிக்கெட், பிப். 28-இல் வளைகோல்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளன.

பொதுப் பிரிவில் பிப். 23-இல் தடகளம், கபடி, கையுந்துப் பந்து, சிலம்பம், இறகுபந்து, பிப். 25-இல் கிரிக்கெட், அரசு ஊழியா்கள் பிரிவில் பிப். 27-இல் தடகளம், கபடி, கையுந்துப் பந்து, இறகுப்பந்து, செஸ் போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிப். 28 -இல் தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து போட்டிகள் காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளன.

மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெல்வோருக்கு முதல் பரிசாக தலா ரூ. 3 ஆயிரம், 2 ஆம் பரிசு தலா ரூ. 2 ஆயிரம், 3 ஆம் பரிசு தலா ரூ.1,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபா் போட்டிகளில் முதலிடம் பெறுபவா்களும், குழுப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா், வீராங்கனைகளும் மாநில போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

எனவே, போட்டிகளில் பங்கேற்போா் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017-03516 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com