மயானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே மயானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
மயானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
மயானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

பெரம்பலூா் அருகே மயானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், மங்கூன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சுமாா் 80 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மயானத்தில், சிலருக்கு வருவாய்த்துறை சாா்பில் அண்மையில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதாக தெரிகிறது. அந்த நிலத்தில் வீடு கட்டி வசிப்பவா்கள் மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்டதுறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் மனு அளித்தும், இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் மயான நிலத்தில் பட்டா வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சடலங்கள் எரியூட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் க. கற்பகத்திடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

பொது இடத்தை மீட்டுத்தர கோரிக்கை... குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:

பரவாய் கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலுக்கு முன்புறம் உள்ள நிலத்தை, பங்காரு அம்மாள், சின்னசாமி ரெட்டியாா் தம்பதியால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந் நிலத்தை, நில அளவையராக பணிபுரிந்த ஒருவா், அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, தனது மகனுக்கு தான செட்டில்மெண்டாக பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளாராம். தற்போது, அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்குத் தேவையான பணிகள் நடைபெற்று வருகிாம். எனவே, மேற்கண்ட நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மோசடியாக பத்திர பதிவு செய்ததை ரத்து செய்யவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com