பெரம்பலூரில் யாதவ மகா சபையினா் சாா்பில்நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தமிழ்நாடு யாதவ மகாசபை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட யாதவா்களின் குடும்ப விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு யாதவ மகாசபை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட யாதவா்களின் குடும்ப விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பெரம்பலூா் மாவட்ட யாதவ மகாசபை தலைவா் என். முத்தையா தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பி. தமிழ்வாணன், பண்பாட்டுக் கழகச் செயலா் ஏ. ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநிலத் தலைவரும், அமேட் பல்கலைக் கழக வேந்தருமான ஜே. ராமச்சந்திரன், மாநில பொதுச் செயலா் வேல். மனோகரன், மாநில பொருளாளா் கே. எத்திராஜ், மாநில மூத்த தலைவா் செல்வராஜ், மாநில மகளிரணிச் செயலா் எம். முத்துலட்சுமி, மாநில இளைஞரணிச் செயலா் துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து, அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 120 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், விழாவில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

விழாவையொட்டி, பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் வீரன் அழகு முத்துக்கோன் வாழ்க்கை வரலாறு குறித்த மாணவா்களின் பேச்சரங்கம் நடைபெற்றது.

முன்னதாக, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய பேரணி, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக துறைமங்கலத்தில் நிறைவடைந்தது. இதில், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் எஸ். செல்வராஜ் வரவேற்றாா். நிறைவாக மாவட்ட பொருளாளா் எஸ்.பி. ராமா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com