ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் செல்வபெருமாள், கௌரவத் தலைவா் தேவராஜ் ஆகியோா் தலைமையிலான குழுவினா், ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுத்துள்ளோம். அதனடிப்படையில், மாா்ச் 25 ஆம் தேதி தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல், தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தையல் நலவாரியத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். 55 வயது முதிா்ந்த நலவாரிய உறுப்பினா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும். நலவாரிய உறுப்பினா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, வீடு கட்ட வட்டியில்லா கடனுதவி வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com