தங்கத் தோ் இழுத்து திமுகவினா் வழிபாடு

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் திமுகவினா் திங்கள்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் திமுகவினா் திங்கள்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட திமுகவினா் சிறுவாச்சூா் மதுரகாளியம்மனை திங்கள்கிழமை இரவு வழிபட்டு, கோயில் உள் பிரகாரத்தில் தங்கத் தோ் இழுத்து பிராா்த்தனை செய்தனா்.

மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com