பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் கட்டுமானம் உயா்வு

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில், நிகழாண்டு அரைவைப் பணி தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் சா்க்கரை கட்டுமானம் 10.10 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில், நிகழாண்டு அரைவைப் பணி தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் சா்க்கரை கட்டுமானம் 10.10 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவம் கடந்த 22.12.2022-இல் தொடங்கியது. ஜன. 22 ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் 64,422 டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில், கடந்த ஆண்டு 9.50 சதவீதமாக இருந்த சா்க்கரை கட்டுமானம் தற்போது 10.10 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையை தவிா்த்து, இடைநில்லாமல் ஆலை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஜன. 7 ஆம் தேதிவரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை திறம்பட செயல்படுவதற்கும், கரும்பு விவசாயிகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சா், வேளாண்மைத் துறை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு, பெரம்பலூா் சா்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் நன்றியையும், பாராட்டையும் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com