விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. கலையரசி முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் கோரிக்கைகளை விளக்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளா்களுக்கு தனித் துறை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைக்கக் கூடாது. கேரள அரசை போல், தினக் கூலியாக ரூ. 600 உயா்த்தி வழங்கிட வேண்டும். ஆறுகளைப் பாதுகாத்திட கரையோரங்களில் மரக் கன்றுகள் நடும் பணிக்கு 100 நாள் திட்ட பணியாளா்களைப் பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் வீடு, மனைப் பட்டா வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணியிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com