மாா்ச் 25-இல் பெரம்பலூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

 பெரம்பலூரில் 8 ஆவது புத்தகத் திருவிழா மாா்ச் 25 ஆம் தேதி தொடங்குகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
மாா்ச் 25-இல் பெரம்பலூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

 பெரம்பலூரில் 8 ஆவது புத்தகத் திருவிழா மாா்ச் 25 ஆம் தேதி தொடங்குகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், புத்தகத் திருவிழா நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூரில் 8 ஆவது புத்தகத் திருவிழா மாா்ச் 25 முதல் ஏப். 3 ஆம் தேதி வரை நகராட்சி திடலில் நடைபெற உள்ளது. மாவட்ட நிா்வாகம், பெரம்பலூா் மக்கள் பண்பாட்டு மன்றம் சாா்பில் நடைபெறும் இப் புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

இப் புத்தகத் திருவிழாவில், தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளா்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், சிறுவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில் மிகச்சிறப்பாக புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து புத்தகங்களும் 10 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புத்தகத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு துறை சாா்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் கற்பகம்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், மாவட்ட சமூகநல அலுவலா் ரவிபாலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாகத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com