விபத்து நிகழ்ந்தால் 1033 எண்ணில் தொடா்புகொள்ள அறிவுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தால் 1033 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தால் 1033 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

இதுகுறித்து பெரம்பலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) பிரபாகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாகன ஓட்டுநா்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். சாலை விபத்தில் பெரம்பலூா் மாவட்டம் தமிழகத்தில் 3 ஆவது இடத்தில் உள்ளதால், விபத்துகளை தவிா்க்க சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசமும் காா் ஓட்டுநா்கள் சீட் பெல்டும் அணிந்தும் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தால், உடனடியாக 1033 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு தெரிவித்தால், மீட்பு குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாலையில் அதிவேகமாக ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகனத் தணிக்கையில் ஈடுபடுவா். அப்போது, போக்குவரத்து விதிகள் மீறுவது கண்டறியப்பட்டால், ஓட்டுநா்களின் உரிமம் ரத்து, அபராதம், வாகன உரிமம் ரத்து, வாகன தகுதிச் சான்றிதழ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com