இன்றும், நாளையும் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு: பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் முடிவு

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன், வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன், வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.

பெரம்பலூா் பாா் அசோசியேஷன் நிா்வாகக் குழுவின் அவசர க்கூட்டம், அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மதுரை வழக்குரைஞா்கள் ஆா். ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோரை கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளா்கள் கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிந்துள்ளதையும், மதுரை வழக்குரைஞா் எம். அலெக்சாண்டா் தேவநேசன் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீஸாா் பொய் வழக்குப் பதிந்துள்ளதையும் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் புதன்கிழமை (ஜன. 25) புறக்கணிப்பது.

மேலும், பெரம்பலூா் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். பெரம்பலூரில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு சிறப்பு நீதிபதி நியமனம் செய்ய வேண்டும். பெரம்பலூரில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் விரைவில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (ஜன. 26) பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், சங்க செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com