போலி நிதி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது

பெரம்பலூரில் போலி நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ. 8 கோடி ஏமாற்றிய பெண்ணை குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூரில் போலி நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ. 8 கோடி ஏமாற்றிய பெண்ணை குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூரில் செயல்பட்டு வந்த ஜே.என்.ஆா் டிரேடிங் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியதை நம்பி, பணத்தைக் கட்டி ஏமாந்ததாக பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், அணைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை வட்டம், விஷ்ணுபுரத்தைச் சோ்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தைச் சோ்ந்த தா்மராஜ் ஆகியோா் தனவேல் உள்ளிட்ட சிலரிடமிருந்து ரூ. 8,01,00,000 வரை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையிலான தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், விஷ்ணுபுரத்திலிருந்த ராதிகாவை கைது செய்து போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com