சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம்  -இரா. முத்தரசன் பேச்சு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். பெரம்பலூா் மாக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவாக எளம்பலூரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது:

கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் வழங்கப்படுகிறது. நடுநிலையோடும், நோ்மையோடும் செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையத்தின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஜனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், மதச் சாா்பின்மை எனும் மகத்தான கொள்கையைக் காப்பாற்றவும் உதயசூரியன் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, செங்குணம், அருமடல், கவுல்பாளையம், நெடுவாசல், க. எறையூா்,க ல்பாடி, அ.குடிகாடு, அயிலூா், சிறுவாச்சூா், நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முத்தரசன் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட திமுக பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜ்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடா் நலக் குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன் உள்பட தோழமைக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com