பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை  மாணவிக்குப் பட்டம் அளித்த தமிழ்நாடு ஐசிடி அகாதெமி தலைமை நிா்வாகி வி. ஸ்ரீகாந்த். உடன், வேந்தா் அ. சீனிவாசன், இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை மாணவிக்குப் பட்டம் அளித்த தமிழ்நாடு ஐசிடி அகாதெமி தலைமை நிா்வாகி வி. ஸ்ரீகாந்த். உடன், வேந்தா் அ. சீனிவாசன், இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன்.

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் 57 மாணவிகள் உள்பட 3,400 மாணவிகளுக்கு பட்டங்கள் அளித்த தமிழ்நாடு ஐசிடி அகாதெமி தலைமை நிா்வாகி வி. ஸ்ரீகாந்த் பேசியது: இக் கல்லூரியில் பயின்ற மாணவிகள் பல்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியில் உள்ளனா். பட்டம் பெற்ற மாணவிகள், உயா்கல்வி பயில இருப்போருக்கு உதாரணமாக இருக்க வேண்டும். பெரம்பலூா் வறட்சி மாவட்டம் எனக் கூறப்படுகிறது. ஆனால், புத்துணா்ச்சியுடன் வரும் மாணவா்களுக்கு வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் கல்வி நிறுவனம் அமைந்த மாவட்டமாகும் என்றாா் அவா். விழாவில் தமிழ்நாடு ஐசிடி அகாதெமி மாநிலத் தலைவா் வி. பூா்ண பிரகாஷ், கிரியேட்டிவ் டெலிவரி மற்றும் ப்ராடக்சன் ஆப்ரேஷன் இந்தியா தலைவா் கிராந்தி சா்மா, மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com