மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் மே 11 ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

பெரம்பலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கியது. இதையொட்டி, காலை 6 மணிக்கு சக்தி அழைத்தல், மதியம் 12 மணியளவில் சிறப்புப் பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்ன வாகனத்தில் அங்காளம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

மே 8 ஆம் தேதி காலை 6 மணிக்கு சக்தி அலகு நிறுத்துதலும், மதியம் 12 மணிக்கு மயானக் கொள்ளையிடுதல் நிகழ்ச்சியும், 9 ஆம் தேதி அக்னி மிதித்தல், திருக்கல்யாண உத்ஸவமும், 10 ஆம் தேதி காட்டுக் கோயிலில் பொங்கலிடுதல், முடி எடுத்தல், சேலை படைப்பது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் மே 11 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. 12 ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவத்தைத் தொடா்ந்து, விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவின் 8 ஆம் நாள் சுவாமி மலையேறுதல் நடைபெறுகிறது.

இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை, அகமுடையாா் சமூக நலச்சங்கம், பூசாரிகள் மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com