புதுகையில் கலைஞர் தமிழ்ச்சங்க சிலம்பு விழா

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் சிலம்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் சிலம்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு சிலம்பு விழாவுக்கு, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ. சாமிநாதன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது:
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிக்கு கருணாநிதி செம்மொழி விழா எடுத்தார். அதற்காக பாடல் எழுதினார். பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிலப்பதிகாரத்தில் வரும் 'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' கூற்றைக் கண்ணகி நம்பவில்லை போலும். ஆதலால் களத்தில் இறங்கிப் போராடினாலோ எனத் தோன்றுகிறது. சேர, சோழ, பாண்டியர் என இவர்களிடையே உட்பகை இருந்தது. ஆனால், தமிழுக்கோ, தமிழர்களுக்கோ ஒரு சோதனை ஏற்பட்டால் அவர்கள் மூவரும் ஒன்றிணைந்த குணம்தான் அறம். அந்த அறம் தற்போது தமிழகத்தில் வேண்டும்.
பெரியார், காமராஜர் போன்றோர் அறிவு மிகுந்த சமுதாயத்தை உருவாக்கினார்கள். ஆனால், தற்போது அந்தப் பாதையில் இருந்து விலகும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்றார்.
எம்எல்ஏ-க்கள் பெரியண்ணன்அரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், மாவட்டபொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ- ரா.சு. கவிதைப்பித்தண் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
சங்க செயலாளர் தய சந்திரசேகரன் அனைவரையும் கெளரவித்தார். முன்னாள் நகர்மன்றத்தலைவர் எம். லியாகத்அலி வரவேற்றார். கனகம்மன்ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com