எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்படவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச்செயலர் ஹெச். ராஜா.
புதுகை மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அது பலிக்காத காரணத்தால் இன்று ஏதோ ஏதோ பேசி வருகிறார். அவர் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படவில்லை, சிறந்த திராவிடக் கட்சியின் தலைவராகவும் செயல்படவில்லை. அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. அதற்காக அதிமுகவை பின்புலத்தில் இருந்து பாஜக இயக்குகிறது என்று கூறுவது தவறு. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குறித்து திருமாவளவன் கூறிவருவது, அவரது தலித் விரோதப் போக்கையே காட்டுகிறது என்றார்.