9,545 மாணவர்களுக்கு மடிக்கணினி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம்  62 பள்ளிகளைச் சார்ந்த  9,545  மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம்  62 பள்ளிகளைச் சார்ந்த  9,545  மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில், வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை   வழங்கினார்.
இதில், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 431 மாணவர்களுக்கும், 678 மாணவிகள் உள்பட மொத்தம் 1,109 பேருக்கும், புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 856  பேருக்கும், சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 565 பேருக்கும், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 21 பள்ளிகளைச் சேர்ந்த  மாணவ, மாணவிகள் 3,108  பேருக்கும், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1,848 பேருக்கும், அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 399  பேருக்கும், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1,660 பேர் உள்பட  மொத்தம் 9,545  பேருக்கு  விலையில்லா மடிக்கணினிகள்  வழங்கப்பட்டன.
நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, புதுக்கோட்டை சார் ஆட்சியர் கே.எம்.சரயு , சட்டப்பேரவை  உறுப்பினர்கள் கந்தர்வகோட்டை பா.ஆறுமுகம், அறந்தாங்கி இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் க. பாஸ்கர், கூட்டுறவு சங்கத் தலைவர்கள்,  உள்ளாட்சி அமைப்பின் முன்னாள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com