ஆவுடையார்கோவிலில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்  ஆவுடையார்கோவில் கீழவீதியில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்  ஆவுடையார்கோவில் கீழவீதியில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்க தாலுகா தலைவர் எஸ். அழகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் சி. சுப்பிரமணியன், தாலுகா செயலர் எம்.எஸ். கலந்தர், பொருளாளர் கே. பால்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தாலுகா செயலர் முருகேஷ் கண்டன உரையாற்றினார். விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், 2016-17-ல் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், காப்பீடு தொகை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அறிவியல் ஆய்வகக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்டித்தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் வே. கணேசன், எஸ். காளிமுத்து, எம். ரெங்கசாமி, கே. சுப்பிரமணியன், எஸ். முத்துராமன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com