மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக  நியமிக்கப்படவுள்ள  தற்காலிகப் பயிற்சியாளர் பணிக்கு பின்வரும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக  நியமிக்கப்படவுள்ள  தற்காலிகப் பயிற்சியாளர் பணிக்கு பின்வரும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்,  அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத்திறனுடைய  குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக முற்றிலும் தாற்காலிகமாக மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் - மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்  வாயிலாக இயன்முறைப் பயிற்சியாளர்கள்,  தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இயன்முறைப் பயிற்சியாளர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக  குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை இயன்முறை மருத்துவப் பட்டமும், தொழில்சார் பயிற்சியாளர் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக  குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை தொழில்சார் பயிற்சியாளர் பட்டமும் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக  குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை பேச்சுப்பயிற்சியாளர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அக்.19.-க்குள் முழு விவரங்களுடன் (கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன்)  புதுக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com