கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வலியுறுத்தல்

கந்தர்வகோட்டையில் சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கந்தர்வகோட்டையில் சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட அடைக்கலம் சாவடி குளம் எதிர்புறம் வயல்வெளி பகுதியில் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அருகருகே செயல்படுகிறது. இந்தக் கடைகளில் மதுபானம் அருந்துவதற்காக தினந்தோறும் ஏராளமானோர் இரு சக்கர வாகனம், நடந்து வருகின்றனர்.
தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக வருவதால் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மேலும் சாலையின் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு நடந்து செல்வோர் மீது மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வருவபவர்கள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
அதிகளவில் விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com