நெல் நாற்று நடவு செய்தல் செயல்விளக்கப் பயிற்சி

வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் நெல் நாற்று நடவு செய்வது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் நெல் நாற்று நடவு செய்வது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் ஊராட்சி அம்பாள்புரத்தில் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சி.மஞ்சு, மு.மோகன்ராஜ், ம.பாண்டுரங்கன், நா.பூசமணி, நா.பிரகாஷ், மு.பிரேம்நாத், ரா.ராஜசேகர், சா.ராகுல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், அம்பாள்புரம் கிராமத்தில்  வோளாண்மை அலுவலர் மகேந்திரன் தலைமையில் உயிர் உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் குறித்து செயல் விளக்கம், நெல் நடவு முறை, நெல் நாற்று வேர் முழுகலுக்கு  விளக்கம் தரப்பட்டது.
மாணவர் குழுவின் செயலாளர் சி.மஞ்சு விவசாயிகள் மத்தியில் பேசியது: நெல் நாற்று வேர் முழுகலுக்கு உயிர் உரங்களை பயன்படுத்தலாம். உயிர் உரமாக அசோஸ்பைரில்லம் பொருத்தமானது.  இந்த உயிர் உரமானது மண்ணில் தழைச்சத்தை நிலை நிறுத்தி பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களை பயன்படுத்துவதின் அளவை குறைக்கலாம் என்றார்.
தொடர்ந்து, உயிர் உரத்தை பயன்படுத்தி வேர் முழுகல் செய்யப்பட்ட நெல் நாற்றுகளை மாணவர்கள் வயலில் நடவு செய்து காண்பித்தனர். திரளான விவசாயிகள் பயன்பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com