ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: செய்தி, விளம்பரத் துறை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து அப்பல்லோ நிர்வாகம்தான் அறிக்கை வெளியிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து அப்பல்லோ நிர்வாகம்தான் அறிக்கை வெளியிட்டது. செய்தி, விளம்பரத் துறை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றார் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
புதுகையில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
தூத்துக்குடி  ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு தான். பசுமை தீர்ப்பாயம் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதால் அரசுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பசுமை தீர்ப்பாயத்தில் அவர்கள் அனுமதி பெற்றாலும் தமிழக அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும். விசாரணை முடிவில், அனைத்து விஷயங்களும் தெரியவரும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் தான் அளித்தது. செய்தித் துறை சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர்கள் தந்த அறிக்கையை பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணியைத் தான் செய்தித்துறை செய்தது. திருவாருர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி அணியினர் சவால் விடுகின்றனர். 
எங்களுக்கு எதிரி திமுக தான். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை, திருவாருர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி இருந்ததால் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது கருணாநிதி இல்லை. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 10 நாட்களில் வாரிசு சண்டையை சமாளிக்கவே நேரமின்றி மு.க.ஸ்டாலின் உள்ளார்.இடைத்தேர்தலில் கூட்டணி தொடர்பாக கட்சித்  தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com