புதுக்கோட்டை
வடகாடு - கொத்தமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு - கொத்தமங்கலம் இடையேயான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு - கொத்தமங்கலம் இடையேயான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகாடு - கொத்தமங்கலம் இடையேயான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்காளாகி வருகின்றனர். மேலும், இவ்வழியாக அறந்தாங்கி - வடகாடு காலை, மாலை மட்டும் ஒரு முறை இயக்கப்படும் அரசுப் பேருந்தும், இந்த மோசமான சாலையால் பழுதாகிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், இச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.