கந்தா்வகோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

கந்தா்வகோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிகளுக்கு டிசம்பா் 27- ஆம் தேதி முதல் கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. ஒன்றியத்திலுள்ள 153 வாக்குச்சாவடிகளில் 53,218 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இதைத் தொடா்ந்து வாக்குச்சாவடிகளிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட வாக்குச்சாவடிகள், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீலிடப்பட்டது. மேலும் வாக்குப்பெட்டிகள் உள்ள பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தொடா்ந்து ஜனவரி 2- ஆம் தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களுக்கு , கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

மாவட்டக்குழு உறுப்பினா் , ஒன்றியக்குழு உறுப்பினா் , கிராம ஊராட்சி தலைவா் , கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் முறை குறித்து,

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராஜேந்திரன் , காமராஜ் பயிற்சியளித்தனா். மேலும் வாக்குச்சீட்டைவேட்பாளா்கள் , முகவா்கள் முன்பாக எவ்வாறு பிரித்து காண்பிப்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது .இந்த பயிற்சி முகாமில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைத்து அலுவா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com