படிப்பு, கலைகளில் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும்

படிப்பு மற்றும் கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றார்


படிப்பு மற்றும் கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வி மாவட்ட அளவில் கலைத்திருவிழா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது: மாணவர்களுக்காக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. 
நீங்கள் படிப்புடன் கலைகள் உள்ளிட்ட பிற திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த இத்தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும்.
விரைவில் வர உள்ள தேர்வுக்கு உங்களைத் தயார்படுத்திடும் வகையில், உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையிலும்,திறமைகளை வெளிப்படுத்தவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
எனவே மாணவர்களாகிய நீங்கள் படிப்பு மற்றும் கலைகளில் உங்களது திறமைகளை பட்டைத் தீட்டி சிறப்பாக முன்னேற வேண்டும் என்றார்.
பாரத சாரண,சாரணியர் இயக்க இலுப்பூர் கல்வி மாவட்டத் தலைவர் இரா.சின்னத்தம்பி பேசியது:
மாணவர்களாகிய நீங்கள் படிப்போடு மட்டுமல்லாமல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.நான் பள்ளி சென்று அதிகம்
படிக்கவில்லை.அதனால் நான் நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்து சமூகத்தில் உள்ள நல்லவர்களைப் பற்றி தெரிந்து கொள்வேன் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குரு.ராஜமன்னார்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.ரவிச்சந்திரன்,மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் வாழ்த்துரை வழங்கினர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கும்மி, குழு நடனம், பரதம் போட்டிகளும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு களிமண் சிற்பம் செய்தல், நாட்டுப்புறப் பாட்டு, கரகம், பரதம், நாடகம், பேச்சுப் போட்டி ஆகியவையும், பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு பறையடித்தல், புல்லாங்குழல் வாசித்தல், ஒயிலாட்டம், தேவராட்டம், பலகுரல் பேச்சு, வீதி நாடகம் போன்றவையும் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக இலுப்பூர்கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் வரவேற்றார்.
கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளராக கவரப்பட்டி தலைமையாசிரியர் இரா.சிவக்குமார்,இணை ஒருங்கிணைப்பாளராக இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி செயல்பட்டனர்.
அமைப்பாளராக இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஆ.எழிலரசி,உதவி அமைப்பாளர் அன்னவாசல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி பணியாற்றினர். 
பள்ளித் தலைமையாசிரியர்கள் இலுப்பூர் தி. ஜயராமன், வயலோகம் யோ.ஜயராஜ், விராலிமலை ரெ.சுரேஷ், சடையம்பட்டி சி.குமார், பெருமாநாடு மாரிமுத்து ஆகியோர் கலைத் திருவிழா நிர்வாகிகளாக இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com