முதல் ரஃபேல் போர் விமானம்இந்தியாவிடம் செப்டம்பரில் ஒப்படைப்பு:      மத்திய அரசு

ரஃபேல் ரகத்தைச் சேர்ந்த முதல் போர் விமானம் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியாவிடம் வரும் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ரஃபேல் ரகத்தைச் சேர்ந்த முதல் போர் விமானம் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியாவிடம் வரும் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை செயலர் அஜய் குமாரிடம், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ரஃபேல் ரகத்தைச் சேர்ந்த முதல் போர் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதில் எந்த கால தாமதமும் இருக்காது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் சிக்லர் இந்த மாதம் தொடக்கத்தில் உறுதியளித்தார். அதன்படி, முதலாவது ரஃபேல் போர் விமானம் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிடம் பிரான்ஸால் ஒப்படைக்கப்பட்டு  விடும். அதேபோல் 36 ரஃபேல் போர் விமானங்களும், இந்திய விமானப்படையிடம் அடுத்த 2 ஆண்டுகளில் ஒப்படைக்கப்பட்டு விடும் என்றார் அவர்.
ரஃபேல் விமானங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து தருவது தொடர்பாக கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் (ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம்) குறித்து அஜய் குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், விதிகளுக்கு உள்பட்டுதான் அனைத்தும் நடைபெற்றுள்ளது என்றார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் பெரும் சர்ச்சை உருவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com