வேந்தன்பட்டி கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள்

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  தேர்தலில்

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  தேர்தலில் அதிமுகவை சார்ந்த 7 பேரும், திமுகவை சார்ந்த 4 பேரும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேந்தன்பட்டி கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 10ம் தேதி, அறந்தாங்கி கூட்டுறவு சார்பதிவாளர் சோ.அன்னலெட்சுமி, அரிமளம் கூட்டுறவு சார்பதிவாளர் எஸ்.ஆசியாபானு  ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. தேர்தலில் 3162 வாக்காளர்களில் 458 வாக்குகள் பதிவாகின. 11 இயக்குனர்கள்  பணியிடத்திற்கு 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் அதிமுகவைச் சார்ந்த எஸ்ஆர்எம்.மலைச்சாமி, ஆண்டிக்காளை, பிச்சன், ராசாத்தி, மருதாயி, சண்முகம், நாகராஜன் ஆகியோரும், திமுகவைச் சார்ந்த இளையராஜா, நாகராஜன், அமுதா, தங்கராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் வரும் 15ம் தேதி பணியேற்கின்றனர். அன்றே தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com