அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி

அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 17 ஆவது ஆண்டாக,  10 மற்றும் 12 ஆம் வகுப்பு

அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 17 ஆவது ஆண்டாக,  10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக். பள்ளியில் நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இப்பள்ளியில் நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும் பெற்றுள்ளனர். 
தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 488, 483 மற்றும் 482 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் டிஎன்எஸ். நாகராஜன், பள்ளி முதல்வர் யோகாராஜா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com