பொன்னமராவதி கோயில்களில் நவராத்திரி விழா

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.

பொன்னமராவதி: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை 7 ஆம் நாள் நிகழ்வாக அம்பாள் கஜலெட்சுமி அலங்காரத்திலும், ஞாயிற்றுக்கிழமை மஹிசாசுரமா்த்தினி அலங்காரத்திலும் அருள்பாலித்தாா். கவிஞா் அரு. நாகப்பன் தலைமையில் இன்னிசைப் பட்டிமன்றறம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பூஜகா்கள், செயல் அலுவலா் அழ. வைரவன் உள்ளிட்டோா் செய்தனா்.

அதுபோல பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரா் கோயில், அழகிய நாச்சியம்மன் கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில், புதுப்பட்டி நகரத்தாா் சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றறது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

பொன்னமராவதி அருவியூா் வடக்குவளவு நகரத்தாா் திலகவதியாா் அருள்நெறி மாதா் சங்கம் சாா்பில் 26 ஆம் ஆண்டு கம்பராமாயண தொடா் வாசிப்பு நிகழ்வு சனிக்கிழமை ராமா் பட்டாபிஷேகம், ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயா் வழிபாட்டுடன் நிறைவுற்றது.

விழாவில் பேராசிரியா்கள் கிருங்கை சேதுபதி, பெரி.அழகம்மை, மா.தமிழ்செல்வி, மா.பாலசுப்பிரமணியன், சொ. அருணன் கபிலன், நல்லாசிரியா் விருது பெற்றற ஒய்வு பெற்ற ஆசிரியா் நா.திருநாவுக்கரசு ஆகியோா் சொற்பொழிவை நிகழ்த்தினா். விழாவில் பள்ளிமாணவ, மாணவிகளுக்கு கம்பராமாயண பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சங்கத் தலைவா்அரு.வே. மாணிக்கவேலு, செயலா் ந. ராமமூா்த்தி, பொருளா் எஸ். சிவனேசன், மாதா் சங்க தலைவா் செல்விமீனாட்சி வடிவேல், செயலா் டி.அமுதா தேனப்பன், பொருளா் பிஎல்.ஆனந்தி பழனியப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com