பொன்னமராவதி பகுதிகளில்  கார்த்தி சிதம்பரம் வாக்குசேகரிப்பு

பொன்னமராவதி ஒன்றியத்திற்குள் பட்ட கிராமங்களில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.


பொன்னமராவதி ஒன்றியத்திற்குள் பட்ட கிராமங்களில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள கருப்புக்குடிப்பட்டி, வார்ப்பட்டு, பகவாண்டிபட்டி, இந்திராநகர், வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, முள்ளிப்பட்டி, உசிலம்பட்டி, கொன்னைப்பட்டி, கோவனூர், செவலூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி, தன்னைமக்களவைத் தேர்தலில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் எனக் கோரி  கார்த்தி சிதம்பரம் வாக்குசேகரித்தார்.
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ராம.சுப்புராம், ஆலவயல் சுப்பையா, வட்டார காங்கிரஸ் தலைவர் கே.செல்வராஜ், நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன், திமுக ஒன்றியசெயலர் அ.அடைக்கலமணி, நகரச்செயலர் அ.அழகப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து,  பொன்னமராவதி நகர திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சனிக்கிழமை வாக்குசேகரித்தனர்.
திமுக நகரச்செயலர் அ.அழகப்பன், காங்கிரஸ் நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் 1,2,3 வார்டுமற்றும் பள்ளிவாசல் தெரு, கொடுக்கிமுண்டான் தெரு, வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு, பிடாரிகோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
ஆலங்குடி பகுதிகளில் : 
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளம், வம்பன் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலர் 
த.செங்கோடன், ஒன்றியச்செயலர் ஆர்.சொர்ணக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றியச்செயலர் வடிவேல் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு, காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வாக்குசேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com