குழந்தைகளின் தனித்திறமையை மதித்து ஊக்கப்படுத்துங்கள்

மற்ற மாணவர்களுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல்,  குழந்தைகளின் தனித்திறமையை

மற்ற மாணவர்களுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல்,  குழந்தைகளின் தனித்திறமையை மதித்து ஊக்கப்படுத்தினால் அவர்கள் தலைசிறந்த மாணவர்களாக  உருவாகுவார்கள் என்றார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் எஸ். கணேசன்.
அறந்தாங்கி சிவானி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
 நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கும், அவர்களைக் கட்டமைத்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்கும்  முழு பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உள்ளது. அடுத்த மாணவருடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பார்க்காமல், உங்கள் குழந்தையின் தனித்திறமையை மதித்து ஊக்கப்படுத்தினால், சிறந்த மாணவராக உருவாகுவார்.
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுத்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமுள்ள குழந்தைகளாக உருவாகுவார்கள் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியை ஜே. சுஜாதாமாலினி பேசியது: இந்தப்பள்ளியில் விளையாட்டு உலகம் உருவாக்கப்பட்டுள்ளது நல்ல முயற்சியாகும்.  பெற்றோர்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை உருவாக்கி, அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். அவர்களை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். பெற்றோரின் எண்ணங்களை அவர்கள் மீது  திணித்து, மன அழுத்தத்தை உருவாக்காதீர்கள். சுயமாக சிந்தனை செய்து முடிவெடுக்கும் படி உருவாக்கினால், அவர்கள் சிறந்த மாணவர்களாக உருவாகிவிடுவார்கள் என்றார். இவ்விழாவுக்கு  எஸ்விஎம் கல்விக்குழுமத் தலைவர்  செல்லச்சாமி தலைமை வகித்தார்,  கல்விக்குழுமங்களின் சேர்மன் எஸ்.துரைஉடையார்  முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினார்.  பள்ளித்தாளாளர் து.விமலா துரை  வரவேற்றார்.
பள்ளியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி இயக்குநர்கள்  சி.தாயுமானவன், வழக்குரைஞர்  சி.ஜெகதீசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நிறைவாக  பள்ளியின் முதல்வர் ஆர்.சித்திரகலா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com