அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படும்: அமைச்சர்

வரும் மழைக்காலத்துக்குள் அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்படும் என்றார்  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

வரும் மழைக்காலத்துக்குள் அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்படும் என்றார்  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இலுப்பூர் அருகே உள்ள சென்னப்பநாயக்கன்பட்டியில்  ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள குளம் தூர்வாரும் பணியை குடிமராமத்து திட்டத்தின் கீழ்   புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் கூறியது:
தமிழகத்தில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் 1,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்படுகின்றன.  மாவட்டத்தில் 650 ஏரி கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன.  
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் அறிவித்துள்ளதுபோல கடைமடைப் பகுதியின் கடைசி வரை முறையாக தண்ணீர் விநியோகம் வழங்கப்படும். மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிக்கு வந்து சேரும்.  இந்தப் பகுதிகளில் உள்ள  வரத்து வாரிகள், ஷட்டர்கள் ஆகியவை சீர் செய்யப்பட்டுள்ளதால் தங்கு தடையின்றி காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அமைச்சர். 
பேரூராட்சிகளுக்கு மோட்டார் வாகனங்கள்:  பின்னர் அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பேரூராட்சியில் திட்ட கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளைச் சேகரிக்கும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.  
மாணவர்களுக்கு பரிசு: அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் தனித் திறன் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி, ஆத்மா குழுத் தலைவர் சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com