தேசியக் கல்விக் கொள்கை வரைவு: கந்தர்வகோட்டையில் கருத்தரங்கம்
By DIN | Published On : 25th August 2019 03:30 AM | Last Updated : 25th August 2019 03:30 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கந்தர்வகோட்டையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் துணைத் தலைவர் பா.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் ரெ.தவச்செல்வன் வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியை ஆ.மணிகண்டன், கோ. சக்திவேல், எம். சிவா திறந்துவைத்தனர். கருத்தரங்கில் கவிஞர்கள் நா.முத்துநிலவன், ராசி.பன்னீர்செல்வம் பங்கேற்று, புதிய தேசியக் கல்விக்கொள்கை குறித்து பேசினர். கருத்தரங்கில் மு. முத்துக்குமார், கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன், அண்டனூர் சுரா, சு.மதியழகன், கே.பாக்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.