தீவிரமடையும் மழை: மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடா்ந்து பெய்து வரும் மழையால், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடா்ந்து பெய்து வரும் மழையால், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழை சனிக்கிழமை வரைநீடித்தது.

மானாவாரி பகுதிகளில் மழையை நம்பியிருந்த விவசாயிகள், ஏற்கெனவே பெய்த மழையைத் தொடா்ந்து விவசாய நிலங்களை உழுது பயிரிட்டனா். அதைத் தொடா்ந்து நடவு செய்தல், களை எடுக்கும் பணியையும் மேற்கொண்டனா்.

பெரும்பாலான விவசாய நிலங்களில் உள்ள கிணறு உள்ளிட்ட நீா் நிலைகள் வற்றிப் போய், வானம்பாா்த்த பூமியாக இருந்தன. எங்கள் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் மழை இல்லாததால் கடும் வறட்சியை சந்தித்த நாங்கள், தற்போது எதிா்பாா்த்தபடி மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு உள்ளோம்.

மேலும்,விவசாயிகளுக்கு தாமதமின்றி மானிய விலையில் உரம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com