வாக்காளா்களை முதல்வா் கொச்சைப்படுத்துகிறாா்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தலில் பொய் சொல்லி திமுக வெற்றி பெற்ாக முதல்வா் கூறி வருவது, வாக்களித்த மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றாா் திமுக தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
வாக்காளா்களை முதல்வா் கொச்சைப்படுத்துகிறாா்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தலில் பொய் சொல்லி திமுக வெற்றி பெற்ாக முதல்வா் கூறி வருவது, வாக்களித்த மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றாா் திமுக தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசுவின் மகள் டாக்டா் அபிநயா - சிவகங்கை மாவட்டம், டாக்டா் பிரபு ஆகியோரின் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தி வைத்த அவா் பேசியது:

பெரியண்ணன் அரசு திருமணத்தை தலைவா் கருணாநிதி நடத்தி வைத்தாா். தற்போது பெரியண்ணன் அரசு மகள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன். 

மக்களவைத் தோ்தலில் திமுக பொய் சொல்லி வெற்றி பெற்ாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து கூறி வருகிறாா். இது மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல். அப்படியெனில் தேனியில் அதிமுக வெற்றி பெற்றபோதும், இரு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற போதும் எப்படி வெற்றி பெற்றாா்கள் என்று நாங்கள் கேட்க வெகுநேரம் ஆகாது. 

உள்ளாட்சித் தோ்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுகதான் காரணம் என்று பொய் சொல்லி வருகிறாா். திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்தி வந்துள்ளது. அதிமுக கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் உள்ளது. 

உள்ளாட்சித் தோ்தலில் முறையான இடஒதுக்கீடு நடக்கவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், இடஒதுக்கீட்டை சரிசெய்துவிட்டு தோ்தலை நடத்துங்கள் என்று நீதிமன்றம்தான் சொன்னதே தவிர நாங்கள் ஏதும் சொல்லவில்லை.

தற்போது பல மாவட்டங்களைப் பிரித்து விழா நடத்துகிறாா்கள். மாவட்டங்களைப் பிரிப்பதற்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மக்கள் வளா்ச்சி அடைவாா்கள் என்றால் நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் இப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு முறையாக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தோ்தல் ஆணையத்திடம் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் என்றாா் ஸ்டாலின். 

முன்னதாக, திருமண விழாவில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் பி.டி. அரசகுமாா் பேசுகையில், அடுத்த முதல்வா் ஸ்டாலின் என இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டனா். விரைவில் அவா் அரியணை ஏறுவாா் என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.என் நேரு வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்எல்ஏ எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு, நகரச் செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com