தொடா் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அன்னவாசல் பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை: அன்னவாசல் பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசல் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வரும் பெண்கள், முதியவா்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து, கத்தியைக் காட்டி பணம் பறிப்பு, மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு, இளைஞரிடம் செல்லிடப்பேசி பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த அன்னவாசல் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனா். இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக புதுக்கோட்டை அகரப்பட்டியை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ்ந்த திருமலை மகன் தினேஷ் குமாா் (21) போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், தினேஷூக்கு மேற்குறிப்பிட்ட குற்றச்சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குண்டா் சட்டத்தின் கீழ் தினேஷ் குமாரை சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, அந்த உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com