கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

கந்தர்வகோட்டையில் பல நூறு ஆண்டுகள்  பழமையான முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில் பல நூறு ஆண்டுகள்  பழமையான முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதிலமடைந்த இக்கோயிலில்  திருப்பணி செய்ய ஊர்ப் பொதுமக்கள், பக்தர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் கோயிலில் சுமார் ரூ. 4 கோடியில்  திருப்பணிகள் தொடங்கி  முடிக்கப்பட்டன.
யாகசாலைகள் அமைத்து 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார் குழுவினர் கடந்த 4 நாள்களாக கணபதி ஹோமம் , தேவதா அனுக்கை, லெட்சுமி ஹோமம் , வாஸ்து சாந்தி, மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தி ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கந்தர்வகோட்டை எம்எல்ஏ  நார்த்தாமலை பா. ஆறுமுகம் ,  அதிமுக ஒன்றியச் செயலர் ஆர். ரெங்கராஜன் , முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பி. சின்னப்பா, மாவட்ட மாணவரணிச் செயலர் பு. பாண்டியன், ஊராட்சி செயலர் அய்யா. செந்தில்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் என். ராமநாதன், கவிதா சிவா, அட்மா இயக்குநர் எம். தமிழழகன், ஆர். முனிமுத்துமுருகன், க . ரவி, க. முத்து , முருகன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சேவை சங்கத்தினர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பக்தர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.  
பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் தி. மன்னர்மன்னன், உதவி ஆய்வாளர் பிரபு, பாஸ்கர் உள்ளிட்ட போலீஸார் செய்தனர்.  பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com