மணமேல்குடி அருகே  கடல் பல்லிகளை வைத்திருந்தவர் கைது

மணமேல்குடி வட்டம்,  ஜெகதாபட்டினம் அருகிலுள்ள  செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த  அழகர்சாமி

மணமேல்குடி வட்டம்,  ஜெகதாபட்டினம் அருகிலுள்ள  செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த  அழகர்சாமி மகன்  ஆறுமுகம் (52)  என்பவர்  அரசால் தடைசெய்யப்பட்ட  கடல் பல்லிகளை வைத்திருப்பதாகக் கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, திருப்புனவாசல்  கடற்கரை  காவல்நிலைய உதவி ஆய்வாளர்  ரகுபதி மற்றும் தலைமை காவலர் கணேசன்  ஆகியோர் செல்லேனந்தலில் புதன்கிழமை ரோந்து சென்றனர். 
  அப்போது சந்தேகத்துக்குரிய முறையில்  சாக்குப் பையில் 1600 கடல் பல்லிகள் ஆறுமுகம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.25,000 மதிப்புள்ள கடல் பல்லிகளைப் பறிமுதல் செய்த கடலோரக் காவல் படையினர், ஆறுமுகத்தை கைது  செய்து புதுக்கோட்டை வனவர் துர்காதேவியிடம் மேல்விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com