பொங்கல் விழாவையொட்டி இலக்கிய நிகழ்வுகள்

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல்

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி நன்னெறிக்கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை பட்டிமன்றம், கவியரங்கம் நடைபெற்றது.
மனித வாழ்வுக்கு அமைதியைத் தருவது கிராம வாழ்வா அல்லது நகர வாழ்வா என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்துக்கு கல்லூரி முதல்வர் சிவ. சொர்ணம் தலைமை வகித்தார். நடுவராக பேராசிரியர் ம. செல்வராசு, கிராம வாழ்க்கையே என்னும் அணியில் கல்லூரிப் பேராசிரியர் பொன். கதிரேசன், மாணவர்கள் நவரெத்தினம், ஜெயசீலன், கீர்த்தனா, கதிரேசன், கிருஷ்ணா, அழகு ஆகியோரும் நகர வாழ்க்கையே என்னும் தலைப்பில் பேராசிரியர் வே.அ. பழனியப்பன், மாணவர்கள் ராகினி, அசாரூதீன், நவநீதகிருஷ்ணன், சாலினி,ஐஸ்வர்யா ஆகியோரும் வாதிட்டனர். இறுதியில் அமைதி தருவது கிராம வாழ்க்கையே எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேராசிரியர் கதி. முருகேசன் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. பேராசிரியர்கள் சி.பூ. முடியரசன், விஜயலெட்சுமி, ரம்யா ஆகியோர்  கவிதை வாசித்தனர். மாணவி அபுரோஸ்பானு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com