பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் திருவள்ளுவர் தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் திருவள்ளுவர் தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.
மாவட்டத்தில் நகரப் பகுதியிலும் புகநகரப் பகுதிகளிலும் வீடுகள் தோறும் செங்கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். கிராமப்பகுதிகளில் வழக்கம்போல மாட்டுப் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடினர்.அதேபோல, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல்வேறுவகையான போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினர்.
புதுக்கோட்டை நகரிலுள்ள பிரகதாம்பாள் கோவில், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில், சாந்தநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தைத்திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் கவிதைப் பித்தன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். 
புதுக்கோட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு புதன்கிழமை சாந்தநாதபுரத்தில் கால்நடைகளுக்கு பழங்களை வழங்கினார். அதே பகுதியில் அந்த மாடுகளும் கன்றுகளும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. 
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினமான புதன்கிழமை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே திருக்குறள் கழகம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அருகேயுள்ள திருவள்ளுவர் சிலைக்கு அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே பகுதியில் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
வர்த்தகர் கழகத் தலைவர் சீனு சின்னப்பா தலைமை வகித்தார். திருக்குறள் கழகத்தின் தலைவர் க. ராமையா, கவிஞர் தங்கம் மூர்த்தி, திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் சந்திரசேகர சுவாமிகள், வாசகர் பேரவைச் செயலர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com