சிறுமி கர்ப்பம்: முதியவருக்கு சிறை
By DIN | Published On : 21st July 2019 03:10 AM | Last Updated : 21st July 2019 03:10 AM | அ+அ அ- |

அறந்தாங்கி அருகே 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவரை போக்úஸா சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து புதுகை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள குமரப்பன்வயலைச் சேர்ந்தவர் ஆ. நாகன் (65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, நாகனை போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.