குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை வழங்கலாம்: ஆட்சியர்

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு, வரும் ஜூன் 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடத்தும்

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு, வரும் ஜூன் 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடத்தும் அமர்வில், 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி, உடல்நிலை, மருத்துவம், விடுதிச் சேர்க்கை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான புகார்கள் மற்றும் குறைகளைக் கேட்டு தீர்வு காணுதல் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவின் அமர்வு, வரும் ஜூன் 21ஆம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்கலாம். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் அனைத்து வகையான புகார்கள் குறித்து நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ வரும் 19ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகதத்திலுள்ள சமூக நல அலுவலகத்திலோ, திருக்கோகர்ணத்திலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலோ அளிக்கலாம். இந்தப் புகார்கள் அங்கு நடைபெறும் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் குழு அமர்வில் ஜூன் 21ஆம் தேதி நேரிலும் புகார்களை அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com