24 மணி நேர மின்தடை புகார் மையம் தொடக்கம்
By DIN | Published On : 23rd June 2019 04:18 AM | Last Updated : 23rd June 2019 04:18 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர மின்தடை புகார் சேவை மையத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
மின் நுகர்வோரின் மின்தடை குறித்த புகார்களை உடனுக்குடன் சரி செய்ய ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1912 அல்லது 18004254912 மற்றும் 04322 223452 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் (பொது) மயில்வாகணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.