புதுக்கோட்டையில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 23rd June 2019 04:20 AM | Last Updated : 23rd June 2019 04:20 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை நகரிலுள்ள கடைவீதிகளில் அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 1.5 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில், வட்டாட்சியர் பரணி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளர் ராஜராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். தெற்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் சுமார் 1.5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ரூ. 1000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.