ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைப்பு
By DIN | Published On : 24th June 2019 08:39 AM | Last Updated : 24th June 2019 08:39 AM | அ+அ அ- |

அன்னவாசல் ஒன்றியத்தில் மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் அப்பகுதி குளக்கரையில் பனைவிதைகள் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் அருகேயுள்ள அம்மாச்சத்திரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் குளக்கரைகளில், மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் மக்கள் தேசம் அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், தன்னார்வலர்களை வரவேற்று நிகழ்வினை துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.
தாய் உள்ளம் இளைஞர் மன்ற தலைவர் சரவணக்குமார், பிரபு மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தின் கரையின் இருபுறமும் ஆயிரம் பனைவிதைகளை விதைத்தனர்.
மக்கள் தேசம் அமைப்பின் பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.