கோட்டைப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:49 AM | Last Updated : 04th March 2019 08:49 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ச பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பதூர் ரஹ்மான், துணைச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கிளைத் தலைவராக எஸ். அயூப்கான், செயலராக ஆர். நிஜாம்கான், பொருளாளராக எம். அப்துல்லா,துணைத் தலைவராக அலாவூதீன், துணைச் செயலராக அப்துல்கரீம் உள்ளிட்டோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் ஊராட்சி கோட்டைப்பட்டினம் கிராமத்தில் குப்பை கிடங்கை இடம் மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.