கந்தர்வகோட்டை அருகே புயல் நிவாரணம் கோரி மறியல்
By DIN | Published On : 08th March 2019 07:58 AM | Last Updated : 08th March 2019 07:58 AM | அ+அ அ- |

கந்தர்வகோட்டை அருகே புயல் நிவாரணக் கணக்கெடுப்பில் விடுபட்டோர் நிவாரணம் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையில் கஜா புயல் பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்கியது. இதில் விடுபட்டோர் தங்களுக்கும் நிவாரணம் கோரி பல்வேறு கிராமங்களில் போராட்டங்களில் ஈடுபட்டபோது விடுபட்டோருக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதாக அரசு அலுவலர்கள் உறுதி அளித்து வந்தனர். இதன்பேரில் வியாழக்கிழமை கல்லாக்கோட்டையில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இப்பட்டியலில் இல்லாத மக்கள் ஆத்திரமடைந்து கல்லாக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்ஆய்வாளர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் முத்துகுமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தி அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.