அம்மாபட்டினத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு
By DIN | Published On : 06th May 2019 03:25 AM | Last Updated : 06th May 2019 03:25 AM | அ+அ அ- |

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 10 நாள்களாக நடைபெற்ற கோடைகால மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
ஆண் பெண்களுக்குத் தனித்தனியாக நடத்தப்பட்ட முகாமில் இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம், இஸ்லாம் தடுக்கும் சமூகத் தீமைகள், பெற்றோரைப் பேணுதல், இஸ்லாம் கூறும் சமூதாயச் சேவைகள், கல்வியின் அவசியம், திருக்குர்ஆன் கூறும் மனிதநேயம், நபிகள் வரலாறு பிறர் நலம் நாடுதல், தனி மனித ஒழுக்கம் குறித்த தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. முகாமில் பள்ளியின் இமாம் ஹாலித் உமரி, கிளைத் தலைவர் சேக் தாவூத், கிளைப் பொருளாளர் முகமது யூசுப் உள்ளிட்டோர் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர். 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி கிளைத் தலைவர் சேக் தாவூத் தலைமையிலும் கிளைச் செயலர் பைரோஸ்கான், பொருளாளர் யூசுப் முன்னிலையிலும் நடைபெற்றது. பயங்கரவாதச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.