அன்னவாசல் கடைகளில் திருட்டு:  கூர்நோக்கு இல்லச் சிறுவன் கைது

அன்னவாசலில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கூர்நோக்கு இல்லச் சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அன்னவாசலில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கூர்நோக்கு இல்லச் சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் சன்னதி வீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடந்தது. இதையடுத்து வியாபாரிகள் சங்க கோரிக்கையின்பேரில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் துணை ஆய்வாளர் சதீஷ்குமார், காவலர்கள் பிரபாகரன், விக்னேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு முதல் கட்டமாக அருகிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். 
அதில் ஒருவர் மட்டுமே கடையின் பூட்டை உடைத்து நுழைவது பதிவாகி இருந்தது. இதைக் கொண்டு நடத்திய  விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது குளத்தூர் பகுதி உடைய மழவராயன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருண் (17) என்பது தெரியவந்தது. 
தொடர் விசாரணையில் அருண் கீரனூர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து தோல்வி அடைந்த நிலையில் நார்த்தாமலை அருகேயுள்ள விளத்துப்பட்டி உறவினர் வீட்டில் தங்கி  பைக்குகளை திருடி வந்தாராம். தகவலறிந்த கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  அருணை கைது செய்து செங்கல்பட்டில் உள்ள சிறார் கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பினர்.  அங்கு அருண் ஐடிஐ வரை படித்து வந்தாராம்.இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினருக்கு கிடைத்த  தகவலையடுத்து செங்கல்பட்டு சென்று விசாரித்ததில் ஹோம் வார்டன் மோட்டார் சைக்கிளை திருடி அருண் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.இந்நிலையில் அன்னவாசல் கடைவீதியில் சந்தேகப்படும்படி ஒருவர் புதன்கிழமை சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் அருண் என்பது  தெரியவந்தது. 
விசாரனையில் அன்னவாசல் கடைவீதியில் அடுத்தடுத்து 3-கடைகளில் திருடியதை அவர்  ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து புதுக்கோட்டை இளஞ்சிறார் நீதிபதி முன் அருணை ஆஜர்படுத்தி திருச்சி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com