"விவசாயத்தை நாசமாக்கும் திட்டங்களை எதிர்ப்போம்'
By DIN | Published On : 16th May 2019 08:30 AM | Last Updated : 16th May 2019 08:30 AM | அ+அ அ- |

விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளை அழிக்கும் நாசகார திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் மேற்கு கிராமத்தில், உயிரிழந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ராஜா பரமசிவத்தின் உடலுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய அவர் மேலும் கூறியது:
ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அதிமுக மாவட்டச் செயலராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரது இறப்பு புதுக்கோட்டை மக்களுக்கு இழப்பாக உள்ளது.
ஹைட்ரோகார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், குடி தண்ணீரை மாசுபடுத்தும் எந்தத் திட்டத்தையும் மக்களிடையே திணிக்கக் கூடாது. இதுபோன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் அவர்.